இசை (Music) இது சிலருக்கு போதை மருந்து, சிலருக்கு ஊக்க மருந்து இன்னும் சிலருக்கு இதுதான் பிணி தீர்க்கும் மருந்து. இந்த உலகில் போதைக்கு அடிமையாதவர்கள் கூட உண்டு ஆனால் இசை எனும் பெரும் போதைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை எனலாம். தனிமையான நேரங்களில் தக்க துணையாகவும், சோகமான நேரங்களில் தோள்கொடுக்கும் தோழனாகவும், நாம் தூங்கும் நேரத்தில் கூட தாலாட்டுப்பாடுவதும் இசை மட்டுமே.
வாழ்வில் துன்பம் இயற்கை என்றாலும் அந்த துன்பத்தைப் போக்க இயற்கையே நமக்கு அளித்த அற்புதமான பரிசுதான் இசை. இந்த உலகில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்து உண்டென்றால் அது இசையாகத்தான் இருக்கும்.